இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட்: பயிற்சியின்போது இந்திய வீரருக்கு காயம்

இந்தியா-இங்கிலாந்து 4-வது டெஸ்ட் 23-ம் தேதி தொடங்க உள்ளது.;

Update:2025-07-17 21:22 IST

image courtesy:BCCI

மான்செஸ்டர்,

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 3 போட்டிகளின் முடிவில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் மோதும் 4-வது போட்டி வரும் 23-ம் தேதி மான்செஸ்டரில் நடைபெற உள்ளது.

தொடரை வெல்லும் வாய்ப்பில் நீடிக்க இந்த 4-வது டெஸ்டில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடிக்குள் இந்திய அணி தள்ளப்பட்டுள்ளது. இதனால் இந்த போட்டிக்காக இந்திய அணியினர் தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பயிற்சியின்போது இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங்குக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை இந்திய அணியின் துணை பயிற்சியாளர் ரியான் டென் டோஸ்கேட் உறுதிபடுத்தியுள்ளார். அத்துடன் கையில் கட்டுடன் அர்ஷ்தீப் சிங் உள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பயிற்சியின்போது பேட்ஸ்மேன் அடித்த பந்தை அர்ஷ்தீப் சிங் தடுக்க முயன்றுள்ளார். அப்போது பந்து தாக்கியதில் கையில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது இந்திய அணியின் மருத்துவக்குழு அவரை கண்காணித்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்