5வது டி20: ஆஸ்திரேலியாவுக்கு 171 ரன்கள் இலக்கு நிர்ணயித்த வெஸ்ட் இண்டீஸ்
ஆஸ்திரேலியா தரப்பில் பென் துவார்ஷியஸ் 3 விக்கெட் வீழ்த்தினார்.;
Image Courtesy: @windiescricket
கயானா,
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கோண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் 4 போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 4-0 என முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 5வது டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸின் தொடக்க வீரர்களாக ஷாய் ஹோப் மற்றும் பிரண்டன் கிங் களம் புகுந்தனர். இதில் ஹோப் 9 ரன், பிரண்டன் கிங் 11 ரன் எடுத்து அவுட் ஆகினர். அடுத்து களம் புகுந்த கீசி கார்டி 1 ரன், ரூதர்போர்டு 35 ரன், ஹெட்மையர் 52 ரன், ஹோல்டர் 20 ரன், ரொமாரியோ ஷெப்பர்ட் 8 ரன், மேத்யூ போர்டு 15 ரன் எடுத்து அவுட் ஆகினர்.
இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 19.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 170 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் பென் துவார்ஷியஸ் 3 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 171 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா ஆட உள்ளது.