அகமதாபாத் விமான விபத்து: கருப்பு பட்டை அணிந்து விளையாடும் இந்தியா, இங்கிலாந்து வீரர்கள்
விமானத்தில் பயணித்தவர்கள் உள்பட 240-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.;
லண்டன் ,
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து இங்கிலாந்தின் லண்டன் நகருக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு புறப்பட்டு சென்றது. அது பறக்க தொடங்கிய சிறிது நேரத்திலேயே கீழே விழுந்து தீப்பற்றி எரிந்து உருக்குலைந்தது. இந்த விபத்தில், விமானத்தில் பயணித்தவர்கள் உள்பட 240-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று நடைபெற்று வரும் இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இரு அணி வீரர்களும் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர்.