ஆஷஸ் முதல் டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் நாளை தொடங்க உள்ளது.;

Update:2025-11-20 14:26 IST

பெர்த்,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் பங்கேற்கிறது.

ஆஷஸ் என்பது இவ்விரு அணிகள் இடையே நூற்றாண்டுக்கு மேலாக நடக்கும் பாரம்பரியமிக்க ஒரு டெஸ்ட் கிரிக்கெட் தொடராகும். அதற்கென தனி வரலாறும் உண்டு.

தற்போதைய ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் பெர்த்தில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் கடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான அந்த அணியில் ஜேக் வெதரால்ட் மற்றும் பிரெண்டன் டாகெட் அறிமுக வீரர்களாக இடம்பெற்றுள்ளனர்.

ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன்: ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), ஜேக் வெதரால்ட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஸ்சேன், டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி, மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், பிரெண்டன் டாகெட், ஸ்காட் போலண்ட்.

Tags:    

மேலும் செய்திகள்