ரோகித் , விராட் கோலிக்கு ஆஸ்திரேலிய தொடர் தான் கடைசி...முன்னாள் வீரர்
ஒரு நாள் தொடரில் ரோகித் சர்மாவும், விராட் கோலியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.;
புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி. இருவரும் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்டனர். ஒருநாள் ஆட்டத்தில் மட்டுமே விளையாட உள்ளனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வரும் 19- ந் தேதி தொடங்கும் 3 போட்டிக்கொண்ட ஒரு நாள் தொடரில் ரோகித் சர்மாவும், விராட் கோலியியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் சர்வதேச போட்டியில் ஆட இருக்கிறார்கள். இந்த தொடரோடு இருவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 2027 உலககோப்பை (ஒருநாள் போட்டி) அணியில் அவர்கள் இடம் பெறுவதை தேர்வு குழு விரும்பவில்லை. இதன் காரணமாகவே ரோகித் சர்மாவின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டு டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில்லிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் , ரோகித் சர்மா விராட் கோலி தொடர்பாக ஆஸ்திரேலிய விமுனால் வீரர் பிராட் ஹாடின் கூறியதாவது ,
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கோலியும், ரோஹித்தும் விளையாடப் போவதை பாருங்கள். அதுதான் அவர்களின் கடைசி ஆட்டம் என நினைக்கிறேன். அதனால் அந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள். தற்போது கில் கேப்டனாக உள்ளதால், ரோஹித் ஷர்மா எந்த அழுத்தமும் இன்றி அடித்து ஆடுவார். என தெரிவித்துள்ளார் .