பெத் மூனி சதம்.... வங்காளதேசத்திற்கு 222 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக பெத் மூனி 109 ரன்கள் எடுத்தார்.;

Update:2025-10-08 18:35 IST

Image Courtesy: @ICC

கொழும்பு ,

13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

இந்த நிலையில் , கொழும்பில் இன்று நடைபெற்று வரும் 9-வது லீக்கில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் ஆடி வருகின்றன. இந்த போட்டிக்கான டாசில் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக அலிசா ஹீலி மற்றும் லிட்ச்பீல்ட் களம் கண்டனர்.

இதில் அலிசா ஹீலி 20 ரன்னிலும், லிட்ச்பீல்ட் 10 ரன்னிலும், அடுத்து வந்த எல்லீஸ் பெர்ரி 5 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து களம் கண்ட பெத் மூனி ஒருபுறம் நிலைத்து நின்று ஆட மறுபுறம் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன. இதில் அன்னபெல் சதர்லேண்ட் 1 ரன், ஆஷ்லே கார்ட்னெர் 1 ரன், தஹ்லியா மெக்ராஜ் 5 ரன், கிம் கார்த் 11 ரன், வரேகம் ரன் எடுக்காமலும் அவுட் ஆகினர்.

மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய பெத் மூனி சதம் அடித்து அசத்தினார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 221 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 222 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாக்கிஸ்தான் ஆட உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்