கேமரூன் கிரீன், ஓவன் அரைசதம்; வெஸ்ட் இண்டீஸை வீழ்த்திய ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியா தரப்பில் கேமருன் கிரீன் (51 ரன்), மிட்செல் ஓவன் (50 ரன்) அரைசதம் அடித்து அசத்தினர்.;
Image Courtesy: @ICC
கிங்ஸ்டன்,
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டி20 போட்டி நேற்று (இந்திய நேரப்படி இன்று) நடைபெற்றது.
இதில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 189 ரன் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக ரோஸ்டன் சேஸ் 60 ரன் எடுத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் துவார்ஷியஸ் 4 விக்கெட் வீழ்த்தினார்.
தொடர்ந்து 190 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலியா 18.5 ஓவரில் 7 விக்கெட்டை இழ்ந்து 190 எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா தரப்பில் கேமருன் கிரீன் (51 ரன்), மிட்செல் ஓவன் (50 ரன்) அரைசதம் அடித்து அசத்தினர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி220 தொடரில் 1-0 என ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது.