சாம்பியன்ஸ் டிராபி: அர்ஷ்தீப், ஹர்ஷித் ராணா இருவரில் யார் இந்தியாவின் ஆடும் அணியில் இடம்பெறுவார்..? தகவல்

இந்தியா தனது முதல் ஆட்டத்தில் வங்காளதேசத்துடன் மோதுகிறது.;

Update:2025-02-17 17:26 IST

image courtesy: BCCI

மும்பை,

8 அணிகள் இடையிலான 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடத்தப்படுகிறது. நாளை மறுதினம் (புதன்கிழமை) பிற்பகல் 2.30 மணிக்கு கராச்சியில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் வங்காளதேசத்துடன் வரும் 20-ம் தேதி மோதுகிறது.

இந்நிலையில் இந்த தொடர் முழுவதும் இந்திய அணியின் ஆடும் அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இடம் பெறுவார் என்று தெரிகிறது. ஆனால் 2-வது வேகப்பந்து வீச்சாளர் இடத்திற்கு அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்ஷித் ராணா இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

இந்நிலையில் வங்காளதேசத்திற்கு எதிரான முதல் போட்டிக்கான இந்தியாவின் ஆடும் அணியில் 2-வது வேகப்பந்து வீச்சாளராக அர்ஷ்தீப் சிங் இடம் பெறுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது. அவர் இடது கை பவுலர் என்பதால் ராணாவை தாண்டி அவருக்கு வாய்ப்பு கொடுக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்