இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவில் மாற்றம்... பி.சி.சி.ஐ. அதிரடி முடிவு

தேர்வுக்குழு தலைவராக அஜித் அகர்கர் தொடருவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-08-22 15:57 IST

image courtesy:BCCI

மும்பை,

இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ.), அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழுவில் சில அதிரடி மாற்றங்களை செய்ய முடிவெடுத்துள்ளது. தற்சமயத்தில் அஜித் அகர்கர் தலைமையில் எஸ்எஸ் தாஸ், சுப்ரதோ பானர்ஜி, அஜய் ரத்ரா, எஸ் சரத் ஆகியோர் தேர்வுக்குழுவில் உள்ளனர்.

இதில் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் மற்றும் அஜய் ராத்ரா ஆகியோரின் பதவிக்காலம் நீட்டிக்கப்படுவதாக பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது. மறுபுறம் மற்றொரு உறுப்பினரான சரத் தனது பதவிக் காலத்தை முடித்துவிட்டார். ஆனால் அவரது பதவிக்காலத்தை நீட்டிக்க பி.சி.சி.ஐ. விரும்பவில்லை. அந்த இடத்தில் இந்திய முன்னாள் வீரர் பிரக்யான் ஓஜா வர உள்ளதாக கூறப்படுகிறது.

தாஸ் மற்றும் பானர்ஜியின் எதிர்காலம் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றாலும், அவர்களுக்கு மாற்று நபருக்கான புதிய விண்ணப்பங்களை வரவேற்க பி.சி.சி.ஐ. தயாராகி வருவதாக கூறப்படுகிறது. தேர்வுக்குழு தலைவராக அஜித் அகர்கரே தொடருவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்