சிஎஸ்கேவில் பிரேவிஸ்க்கு பதிலாக வேறு வீரரை எடுக்க திட்டமிட்ட நிர்வாகம்: முடிவு மாறியது எப்படி?
பிரேவிஸ் அணியில் சேருவதற்கு பயிற்சியாளர் பிளெமிங் முக்கிய காரணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.;
நடந்து முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் லீக் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கம்பீரமாக களமிறங்கிய சிஎஸ்கே அணி, ஆரம்பம் முதலே தடுமாற்றம் கண்டது.தொடர் தோல்விகளுக்கு மத்தியில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக விலகினார். இதன்பின்னர் கேப்டன் பொறுப்பை மீண்டும் தோனியே பார்த்துக்கொண்டார். ஆனாலும் சிஎஸ்கே வெற்றி பாதைக்கு திரும்பவில்லை. சென்னை அணி 4 வெற்றி, 10 தோல்விகளுடன் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தது.
ஐபிஎல் போட்டிகளில் கடைசி சில ஆட்டங்களில் சிஎஸ்கே அணியில் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்தவரும் குட்டி ஏபிடி என அழைக்கப்படுபவருமான பிரேவிஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டார். குர்ஜப்னீத் சிங் காயமடைந்ததால், அவருக்குப் பதிலாக பிரேவிஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவரது அதிரடி ஆட்டம் சிஎஸ்கே ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.
தொடக்க ஆட்டங்களில் பிரேவிஸ் அணியில் இருந்தால், சென்னை அணியின் ஆட்டமே வேறு விதமாக இருந்திருக்கும் என சிஎஸ்கே ரசிகர்கள் புளகாங்கிதம் அடைந்தனர். வரும் ஐபிஎல் தொடரிலும் சிஎஸ்கே அணியின் சொத்தாக பிரேவிஸ் இருப்பார் என நம்பப்படுகிறது. இதற்கிடையே, பிரேவிஸ் அணியில் சேருவதற்கு பயிற்சியாளர் பிளெமிங் முக்கிய காரணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.ஐபிஎல் தொடரில் மாற்று வீரருக்கான தேர்வின் போது முதலில் இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஜானி பேஸ்டோவை தேர்வு செய்ய சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்ததாம். ஆனால், பயிற்சியாளர் பிளெமிங் தலையீடு காரணமாக பிரேவிஸ்க்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.