தோனி, பண்ட் இல்லை.. இந்தியாவின் சிறந்த விக்கெட் கீப்பர் யார்..? கெய்க்வாட் வேடிக்கையான பதில்

சூப்பர் கிங்ஸ் அகாடமியில் உள்ள குழந்தைகளுடன் கெய்க்வாட் கலந்துரையாடினார்.;

Update:2025-08-22 20:16 IST

image courtesy:PTI

சென்னை,

புச்சிபாபு கோப்பைக்கான கிரிக்கெட் தொடர் சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் மராட்டிய அணிக்காக ருதுராஜ் கெய்க்வாட் விளையாடி வருகிறார். இந்த தொடரின் முதல் ஆட்டங்கள் நிறைவடைந்துள்ளன.

இந்த சூழலில் ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான ருதுராஜ் கெய்க்வாட், சூப்பர் கிங்ஸ் அகாடமியில் உள்ள குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.

அதில் அவரிடம் இந்தியாவின் சிறந்த விக்கெட் கீப்பர் யார்? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மகேந்திரசிங் தோனி அல்லது ரிஷப் பண்ட் ஆகியோரில் ஒருவர் பெயரை கெய்க்வாட் கூறுவார் என்று அனைவரும் நினைத்தனர்.

ஆனால் அவர் தன்னை சுட்டிக்காட்டி, “என் கீப்பிங்கை நீங்கள் பார்த்ததில்லையா? யூடியூபில் போய் பாருங்கள். சோயிப் அக்தர் பவுலிங்கை பார்ப்பதற்குப் பதிலாக, என் கீப்பிங்கை பாருங்கள்" என்று வேடிக்கையாக பதிலளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்