சென்னை அணியின் இளம் வீரர்களுக்கு தோனி அறிவுரை

13 ஆட்டங்களில் விளையாடிய சென்னை அணிக்கு இது 10-வது தோல்வியாகும்.;

Update:2025-05-21 06:48 IST

புதுடெல்லி,

ஐ.பி.எல். தொடரில் டெல்லியில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. சென்னை அணி 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 187 ரன்கள் எடுத்தது. சென்னை அணி தரப்பில் அதிகபட்சமாக பிரெவிஸ் 42 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து 188 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ஆடியது. ராஜஸ்தான் அணி துவக்கத்தில் இருந்தே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 17.4 ஓவர்களில் 4 விக்கெட் மட்டுமே இழந்து 188 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. 13 ஆட்டங்களில் விளையாடிய சென்னை அணிக்கு இது 10-வது தோல்வியாகும்.

இந்த நிலையில், தோல்வி தொடர்பாக பேசிய சென்னை அணி கேப்டன் தோனி கூறியதாவது

இது ஒரு நல்ல ஸ்கோர், பிரெவிஸின் இன்னிங்ஸ் மிகவும் நன்றாக இருந்தது, ரிஸ்க் எடுத்து விளையாடினார் , அதுதான் நாங்கள் மேம்படுத்த விரும்பும் கட்டம். ஆனால் தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்தோம். காம்போஜ் மிகவும் நன்றாக பந்து வீசுகிறார் பவர்பிளேயில் மூன்று ஓவர்கள் வீசுவது கடினம்.

எங்கள் இளைய வீரர்களைப் பொறுத்தவரைஅவர்கள் தொடர்ந்து சிறப்பாக விளையாட முயற்சி செய்ய வேண்டும், ஆனால் நீங்கள் 200-க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டைத் தேடுகிறீர்கள் என்றால் தொடர்ந்து விளையாடுவது கடினம்.எந்த கட்டத்திலும் சிக்ஸர்களை அடிக்கும் திறன் அவர்களிடம் உள்ளது.

எதிர்பார்ப்புகள் அதிகரிக்கும் போது அழுத்தத்தை எடுக்காதீர்கள்.மூத்த வீரர்கள் மற்றும் பயிற்சி ஊழியர்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்.. இது ஆட்டத்தைப் படிப்பது பற்றியது. அனைத்து இளைஞர்களுக்கும் இது எனது அறிவுரையாக இருக்கும்.என தெரிவித்தார் . 

Tags:    

மேலும் செய்திகள்