போதை பழக்கத்துக்கு அடிமை: முடிவுக்கு வந்த ஜிம்பாப்வே முன்னணி வீரரின் கிரிக்கெட் வாழ்க்கை

இவர் ஜிம்பாப்வே அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார்.;

Update:2025-11-07 09:41 IST

ஹராரே,

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னணி வீரருமான சீன் வில்லியம்ஸ், போதை பொருளுக்கு அடிமையாகி அதனால் பல ஆட்டங்களை தவறவிட்டதை அறிந்த ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் அவர் மீது அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அவரது ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாது, இனி ஒரு போதும் ஜிம்பாப்வே அணித் தேர்வுக்கு கருத்தில் கொள்ளப்படமாட்டார் என கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது. இதனால் அவரது கிரிக்கெட் வாழ்க்கை ஏறக்குறைய முடிவுக்கு வந்துள்ளது.

39 வயதான சீன் வில்லியம்ஸ் ஜிம்பாப்வே அணிக்காக 164 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 8 சதம் உள்பட 5,217 ரன்கள் சேர்த்துள்ளார். அத்துடன் 24 டெஸ்ட் மற்றும் 85 இருபது ஓவர் போட்டிகளிலும் ஆடியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்