இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர்: பாகிஸ்தான் அணி அறிவிப்பு
இலங்கை - பாகிஸ்தான் முதல் ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது.;
ராவல்பிண்டி,
இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை (11-ம் தேதி) ராவல்பிண்டியில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்த தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஷாகீன் அப்ரிடி தலைமையிலான அந்த அணியில் பாபர் அசாம், ரிஸ்வான், பகர் ஜமான், சைம் அயூப், அப்ரார் அகமது போன்ற நட்சத்திர வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
பாகிஸ்தான் அணி விவரம்: ஷாகீன் அப்ரிடி (கேப்டன்), அப்ரார் அகமது, பாபர் அசாம், பஹீம் அஷ்ரப், பைசல் அக்ரம், பகர் ஜமான், ஹரிஸ் ரவுப், ஹசீபுல்லா, ஹுசைன் தலாத், முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், முகமது வாசிம் ஜூனியர், நசீம் ஷா, சைம் அயூப், சல்மான் ஆகா.