துலீப் கோப்பை கிரிக்கெட்: மத்திய மண்டல அணி அறிவிப்பு... துருவ் ஜுரெலுக்கு கேப்டன் பொறுப்பு

துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டி (4 நாள் ஆட்டம்) இந்த மாதம் 28-ந் தேதி முதல் செப்டம்பர்15-ந் தேதி வரை பெங்களூருவில் நடக்கிறது.;

Update:2025-08-08 11:51 IST

கோப்புப்படம்

மும்பை,

துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டி (4 நாள் ஆட்டம்) இந்த மாதம் 28-ந் தேதி முதல் செப்டம்பர்15-ந் தேதி வரை பெங்களூருவில் நடக்கிறது. இந்த போட்டியில் வடக்கு, கிழக்கு, மத்திய, வடகிழக்கு மண்டலங்கள் காலிறுதியில் மோதுகின்றன. தெற்கு மற்றும் மேற்கு மண்டல அணிகள் நேரடியாக அரையிறுதியில் விளையாட உள்ளன.

இந்நிலையில் இந்த தொடருக்கான மத்திய மண்டல அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு துருவ் ஜுரெல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ரஜத் படிதார் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், ரஜத் படிதாரின் உடல் நிலையை பொறுத்தே அவர் ஆடுவது முடிவு செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

மத்திய மண்டல அணி விவரம் பின்வருமாறு:-

துருவ் ஜுரெல் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ரஜத் படிதார் (துணை கேப்டன் - உடற்தகுதி அனுமதிக்கு உட்பட்டது), ஆர்யன் ஜுயல், தனேஷ் மாலேவார், சஞ்சீத் தேசாய், குல்தீப் யாதவ், ஆதித்ய தாக்ரே, தீபக் சாஹர், சரண்ஷ் ஜெயின், ஆயுஷ் பாண்டே, ஒய் சுபம் ஷர்மா, யாஷ் ரதோட், ஹர்ஷ் துபே, மனவ் சுதர், கலீல் அகமது.

ரிசர்வ் வீரர்கள்: மாதவ் கவுசிக், யாஷ் தாக்கூர், யுவராஜ் சவுத்ரி, மஹிபால் லோம்ரோர், குல்தீப் சென், உபேந்திர யாதவ்.

Tags:    

மேலும் செய்திகள்