துலீப் கோப்பை கிரிக்கெட்: ருதுராஜ் கெய்க்வாட் சதமடித்து அசத்தல்

157 பந்துகளில் 13 பவுண்டரியுடன் 121 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்;

Update:2025-09-04 16:00 IST

கோப்புப்படம் 

பெங்களூரு,

துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2-வது அரையிறுதி போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் மேற்கு - மத்திய மண்டல அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற மேற்கு மண்டல அணி, முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி, அந்த அணி முதலில் பேட்டிங் செய்தது.

முன்னனி வீரர்களான ஜெய்ஸ்வால் 4 ரன்னிலும், ஸ்ரேயஸ் ஐயர் 25 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். எனினும், அனுபவ வீரரான ருதுராஜ் கெய்க்வாட் நிதானமாக செயல்பட்டு ரன்குவிப்பில் ஈடுபட்டார். தொடர்ந்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கெய்க்வாட், சதமடித்து அசத்தினார். தற்போது 157 பந்துகளில் 13 பவுண்டரியுடன் 121 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார். மேற்கு மண்டல அணி தற்போதுவரை 68 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 305 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.  

Tags:    

மேலும் செய்திகள்