முதல் ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா இன்று மோதல்
இவ்விரு அணிகள் இடையே முதலில் நடைபெற்ற டி20 தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றியது.;
image courtesy:ICC
கெய்ன்ஸ்,
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது.
அடுத்ததாக இவ்விரு அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி கெய்ன்ஸ் நகரில் இந்திய நேரப்படி இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது.
டி20 தொடரில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் தென் ஆப்பிரிக்க அணி ஆயத்தமாகி உள்ளது. மறுமுனையில் சொந்த மண்ணில் தொடரை வெற்றியுடன் தொடங்க ஆஸ்திரேலியா வரிந்து கட்டும் என்பதால் இந்த போட்டி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.