முதல் ஒருநாள் போட்டி: பாகிஸ்தான் அணிக்கு அபராதம் விதித்த ஐ.சி.சி.

இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.;

Update:2025-11-14 12:35 IST

துபாய்,

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் கடந்த 11ம் தேதி நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இலங்கையை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பாகிஸ்தான் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி இன்று நடைபெறுகிறது. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக நேற்று நடக்க இருந்த இந்த போட்டி ஒரு நாள் தள்ளிவைக்கப்பட்டு இன்று நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertising
Advertising

முன்னதாக நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீசி முடிக்கவில்லை. 4 ஓவர்கள் தாமதமாக பந்துவீசி உள்ளது. அதன் காரணமாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) பாகிஸ்தான் அணியில் இடம்பெற்றிருந்த வீரர்களுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து தலா 20 சதவீதத்தை அபராதமாக விதித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்