முதல் ஒருநாள் போட்டி: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதல்
ஆஸ்திரேலியா - இந்தியா மகளிர் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் இன்று தொடங்க உள்ளது.;
image courtesy:PTI
முல்லான்பூர்,
ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி முல்லான்பூரில் இன்று நடைபெற உள்ளது.
எதிர்வரும் ஐ.சி.சி. மகளிர் உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக பலம் வாய்ந்த இரு அணிகளும் மோத உள்ளதால் இந்த தொடர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.