இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இங்கிலாந்து அணி அறிவிப்பு

இந்தியா - இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டி 20-ம் தேதி தொடங்க உள்ளது.;

Update:2025-06-05 14:34 IST

image courtesy:PTI

லண்டன்,

இந்திய கிரிக்கெட் அணி இந்த மாதம் (ஜூன்) முதல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஜூன் 20-ந் தேதி லீட்சில் தொடங்குகிறது. இந்த தொடரில் இந்திய அணி புதிய டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில் தலைமையில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.

இந்நிலையில் இந்த தொடரின் முதல் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான அந்த அணியில் ஜோ ரூட் ஜேக்கப் பெத்தேல், ஹாரி புரூக், பென் டக்கெட் போன்ற நட்சத்திர வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இங்கிலாந்து அணி விவரம் பின்வருமாறு:- பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஷோயிப் பஷீர், ஜேக்கப் பெத்தேல், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், சாம் குக், ஜாக் கிராலி, பென் டக்கெட், ஜேமி ஓவர்டன், ஓலி போப், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், ஜோஷ் டங், கிறிஸ் வோக்ஸ்.

Tags:    

மேலும் செய்திகள்