தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இந்திய அணியிலிருந்து நட்சத்திர ஆல் ரவுண்டர் விடுவிப்பு

இந்தியா - தென் ஆப்பிரிக்கா முதல் டெஸ்ட் போட்டி நாளை நடைபெற உள்ளது.;

Update:2025-11-13 08:07 IST

கொல்கத்தா,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டனில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

இந்த தொடர் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதனையொட்டி இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியிலிருந்து நட்சத்தில் ஆல் ரவுண்டரான நிதிஷ்குமார் ரெட்டி விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான காரணம் என்னவெனில், அவர் ராஜ்கோட்டில் நடக்கும் தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆடும் இந்திய ‘ஏ’ அணியுடன் இணைகிறார். இதன் முதல் போட்டி இன்று நடைபெற உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்