முதல் டெஸ்ட்: இந்தியாவின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த சாஸ்திரி... கோலியின் இடத்தில் யார் தெரியுமா..?

இந்தியா-இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டி 20-ம் தேதி தொடங்க உள்ளது.;

Update:2025-06-17 18:22 IST

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 20-ந் தேதி லீட்சில் தொடங்குகிறது. இது 4-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய டெஸ் அணியின் புதிய கேப்டனாக 25 வயதான சுப்மன் கில் நியமிக்கப்பட்டு இருக்கிறார். கேப்டன்ஷிப்பில் போதிய அனுபவம் இல்லாத அவரது தலைமையில் இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் எப்படி விளையாடப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.

மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி களமிறங்கிய நம்பர் 4 இடத்தில் விளையாடப்போகும் வீரர் யார்? என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகமாகவே எழுந்துள்ளது.

இந்நிலையில் இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரரான ரவி சாஸ்திரி தேர்வு செய்து அறிவித்துள்ளார். அதில் விராட் கோலி விளையாடிய இடத்தில் புதிய டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில்லை அவர் தேர்வு செய்துள்ளார். அத்துடன் சாய் சுதர்சன் மற்றும் கருண் நாயரை அணியில் சேர்த்துள்ளார்.

ரவி சாஸ்திரி தேர்வு செய்த இந்திய அணியின் பிளேயிங் லெவன் பின்வருமாறு:-

1. ஜெய்ஸ்வால்

2. கே.எல்.ராகுல்

3. சாய் சுதர்சன்

4. சுப்மன் கில் (கேப்டன்)

5. கருண் நாயர்

6. ரிஷப் பண்ட்

7. ரவீந்திர ஜடேஜா

8. ஷர்துல் தாகூர்

9. அர்ஷ்தீப் சிங்/பிரசித் கிருஷ்ணா

10. ஜஸ்பிரித் பும்ரா

11. முகமது சிராஜ்

Tags:    

மேலும் செய்திகள்