கிரிக்கெட் ஜாம்பவானை சந்தித்த கால்பந்து ஜாம்பவான்
மும்பை வான்கடே மைதானத்திற்கு வந்த மெஸ்ஸிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.;
மும்பை ,
அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் லயோனல் மெஸ்ஸி நாள் சுற்றுப்பயணமாக நேற்று இந்தியா வந்தார். இந்த நிலையில் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இன்று மும்பை வந்தடைந்தார். மும்பை வான்கடே மைதானத்திற்கு வந்த மெஸ்ஸிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மைதானத்தில் நிரம்பி இருந்த ரசிகர்கள் 'மெஸ்ஸி மெஸ்ஸி' என கோஷம் எழுப்பினர். தொடர்ந்து காட்சி கால்பந்து போட்டியை மெஸ்ஸி தொடங்கி வைத்தார். தொடர்ந்து இந்திய கால்பந்து ஜாம்பவான் சுனில் சேத்ரியை மெஸ்ஸி சந்தித்தார்.
இதனை தொடர்ந்து கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரை மெஸ்ஸி சந்தித்து பேசினார். தனது கையெழுத்திட்ட இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சியை மெஸ்ஸிக்கு சச்சின் வழங்கினார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.