இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் திலீப் தோஷி காலமானார்

இருதய கோளாறு காரணமாக இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் திலீப் தோஷி (77) காலமானார்.;

Update:2025-06-24 12:14 IST

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் திலீப் தோஷி (வயது 77). இடதுகை சுழற்பந்து வீச்சாளரான இவர், 1979-83 காலத்தில் இந்திய அணிக்காக 33 டெஸ்ட் மற்றும் 15 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

டெஸ்டில் 6 முறை 5 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார். இந்நிலையில், இருதய கோளாறு காரணமாக திலீப் தோஷி இன்று காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

திலீப் தோஷி இறப்பிற்கு சச்சின் டெண்டுல்கர், அனில் கும்ப்ளே, ரவி சாஸ்திரி உள்ளிட்ட மூத்த கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்