ரோகித், கோலி இருப்பது கில்லுக்கு சிறப்பானதாக இருக்கும்: அக்சர் படேல்
இந்திய நட்சத்திர வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் 7 மாதத்துக்கு இடைவெளிக்கு பிறகு களம் திரும்புகின்றனர்.;
பெர்த்,
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெர்த்தில் நாளை நடக்கிறது. டெஸ்ட் மற்றும் டி20 போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட இந்திய நட்சத்திர வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் 7 மாதத்துக்கு இடைவெளிக்கு பிறகு களம் திரும்புகின்றனர்.
இந்த போட்டி குறித்து இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் அக்ஷர் பட்டேல் கூறுகையில்,
‘இந்திய அணியில் ரோகித், கோலி இருப்பது கில்லுக்கு சிறப்பானதாக இருக்கும். முன்னாள் கேப்டன்களான அவர்களது ஆலோசனை கில் கேப்டன்ஷிப்பில் வளர உதவிகரமாக இருக்கும். கில் கேப்டன்ஷிப்பில் நல்ல விஷயம் என்னவென்றால் அவர் அழுத்தத்துக்கு ஆளாகமாட்டார்.
டிராவிஸ் ஹெட் சொன்னது போல், ரோகித் சர்மா, விராட் கோலி இருவரும் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள். முதல் ஆட்டத்துக்கு பிறகு அவர்களது பார்ம் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம். அவர்கள் தொழில்முறை வீரர்கள் என்பதால் என்ன செய்ய வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும். பெங்களூருவில் உள்ள இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு மையத்தில் பயிற்சி எடுத்துள்ள அவர்கள் தயாராக இருப்பதாக நினைக்கிறேன். அவர்கள் வலைப் பயிற்சியில் சிறப்பாக விளையாடினர். மேலும் அவர்களது உடல் தகுதி நன்றாக இருக்கிறது’ என்றார்.