இந்திய அணிக்கு அடுத்த பயிற்சியாளராக இவரை நியமிக்க வேண்டும் - புஜாரா விருப்பம்

அஸ்வின் ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் மட்டுமே விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.;

Update:2025-08-17 15:19 IST

கோப்புப்படம்

புதுடெல்லி,

தற்போது சிவப்பு பந்து வடிவத்தில் (டெஸ்ட் கிரிக்கெட்) உள்நாடு மற்றும் கவுண்டி கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடிய போதும் புஜாராவுக்கு இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இதன் காரணமாக அவருடைய சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டதாகவே கூறப்படுகிறது.

புஜாரா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை இந்த அளவில் இருக்க, இந்திய அணிக்கு தன்னால் மீண்டும் தேர்வாக முடியும் என நம்புகிறார். இதற்காக தேர்வுக்குழு தன்னை அழைக்கும் பொழுது, தான் முழு அளவில் தயாராக இருக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து விளையாடி வருவதாகவும் கூறியிருக்கிறார்.

இந்த நிலையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவரிடம் இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் யார்? கிரிக்கெட்டின் அனைத்து சாதனைகளையும் முறியடிக்க கூடிய வீரராக யார் இருப்பார்? என்ற கேள்விகள் முன்வைக்கப்பட்டது. இந்த இரண்டு கேள்விகளுக்கும் இரண்டு இந்திய வீரர்களை புஜாரா தேர்ந்தெடுத்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது, இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் பதவிக்கு யார் வரவேண்டும் என்ற கேள்விக்கு பதில் அளித்த புஜாரா தன்னுடன் இணைந்து விளையாடிய, தமிழகத்தின் ரவிச்சந்திரன் அஸ்வினை தேர்ந்தெடுத்திருக்கிறார்.

மேலும் கிரிக்கெட்டின் அனைத்து சாதனைகளையும் முறியடிக்க கூடிய திறமை வாய்ந்த வீரர் யார்? என்ற கேள்விக்கு இந்திய முன்னாள் கேப்டனுமான விராட் கோலியை தேர்ந்தெடுத்திருக்கிறார். அஸ்வின் ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் மட்டுமே விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்