இங்கிலாந்து தொடருக்கு தயாராக இருந்தார் ஆனால்....- விராட் குறித்து டெல்லி பயிற்சியாளர் கருத்தால் சர்ச்சை

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி நேற்று அறிவித்தார்.;

Update:2025-05-13 09:05 IST

image courtesy:PTI

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். இந்திய அணிக்காக கடந்த 2011-ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆன அவர் 123 போட்டிகளில் விளையாடி அதில் 30 சதம் உட்பட 9,230 ரன்கள் குவித்துள்ளார்.

மேலும் 68 போட்டிகளில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ள விராட் அதில் 40 போட்டிகளை வென்று கொடுத்து இந்திய அணிக்காக அதிக வெற்றிகளை பெற்றுக்கொடுத்த கேப்டனாகவும் வரலாறு படைத்துள்ளார். அந்த சூழலில் தற்போது ஓய்வு பெற்றுள்ள விராட் கோலி குறித்து பல முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லி ரஞ்சி அணியின் பயிற்சியாளர் சரந்திப் சிங் அளித்துள்ள பேட்டி தான் தற்போது பல சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த ஆஸ்திரேலிய தொடருக்கு பின் விராட் கோலி ரஞ்சி தொடரில் டெல்லி அணிக்காக போட்டி ஒன்றில் விளையாடினார். அப்போது டெல்லி அணியின் பயிற்சியாளராக இருந்த சரந்தீப் சிங்கிடம் விராட் கோலி தாம் இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கு தீவிரமாக தயாராக முடிவெடுத்து இருப்பதாக கூறியிருக்கிறார். இது குறித்து பேசி உள்ள பயிற்சியாளர் சரந்தீப் சிங் கூறியதாவது,

நான் விராட் கோலியிடம் சில வாரங்களுக்கு முன்பு பேசினேன். அப்போது அவர் இங்கிலாந்து தொடருக்கு தயாராகும் விதமாக கவுன்டி கிரிக்கெட்டில் விளையாட விருப்பம் தெரிவித்து இருந்தார். இதைப் போன்று இங்கிலாந்தில் நடைபெறும் இந்தியா ஏ போட்டியிலும் பங்கு பெற கோலி முடிவு எடுத்திருந்தார்.

மேலும் 2018-ம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து தொடர் போல் மீண்டும் நான்கு அல்லது ஐந்து சதங்கள் அடிப்பேன் என்றும் கோலி என்னிடம் நம்பிக்கை தெரிவித்து இருந்தார். ரஞ்சிப் போட்டி விளையாட வந்த விராட் கோலி என்னிடம் இதை உறுதியாக சொல்லியிருந்தார். ஆனால் தற்பொழுது என்ன நடந்தது என தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார். தற்போது இவரது கருத்துகள் வைரலாகி வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்