இந்தியா-இங்கிலாந்து 2-வது ஒருநாள் போட்டி: மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்

ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.;

Update:2025-07-19 15:10 IST

image courtesy: twitter/@BCCIWomen

லண்டன்,

ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை முதல்முறையாக வென்ற இந்திய அணி அடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் சவுத்தம்டனில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்சில் இன்று நடக்கிறது.

இந்நிலையில் லார்ட்ஸ் மைதானத்தில் தற்சமயம் மழை பெய்வதன் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மழை நின்றவுடன் ஆட்டம் தொடங்கும். 

Tags:    

மேலும் செய்திகள்