சர்வதேச டி20 கிரிக்கெட்: விராட் கோலியின் சாதனையை தகர்த்து உலக சாதனை படைத்த பாபர் அசாம்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் பாபர் அசாம் 68 ரன்கள் அடித்தார்.;

Update:2025-11-02 15:41 IST

image courtesy:PTI

லாகூர்,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் முடிந்தது.

தொடர்ந்து இவ்விரு அணிகள் இடையே டி20 தொடர் நடைபெற்றது. இதில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளின் முடிவில் தொடர் 1-1 என சமனில் இருந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 139 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரீசா ஹெண்ட்ரிக்ஸ் 34 ரன் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் ஷாகீன் அப்ரிடி 3 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து 140 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த பாகிஸ்தான் 19 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 140 ரன் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக பாபர் அசாம் 68 ரன் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் கைப்பற்றியது.

பாபர் அசாம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 50+ ரன்கள் அடிப்பது இது 40-வது முறையாகும். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக முறை 50+ ரன்கள் குவித்த வீரர் என்ற விராட் கோலியின் (39 முறை) சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

அந்த பட்டியல்:

1. பாபர் அசாம் - 40 முறை

2. விராட் கோலி - 39 முறை

3. ரோகித் சர்மா - 37 முறை

4. ரிஸ்வான் - 31 முறை

5. பட்லர் / வார்னர் - 29 முறை

Tags:    

மேலும் செய்திகள்