ஐ.பி.எல்.; பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு 185 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை

மும்பை தரப்பில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 57 ரன்கள் எடுத்தார்.;

Update:2025-05-26 21:26 IST

கோப்புப்படம்

ஜெய்ப்பூர்,

10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் 22-ம் தேதி தொடங்கிய இந்த தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று நாளையுடன் நிறைவடைகிறது.

இந்நிலையில் ஜெய்ப்பூரில் இன்று இரவு நடைபெற்று வரும் 69-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் ரிக்கெல்டன் களம் புகுந்தனர்.

இதில் ரிக்கெல்டன் 27 ரன், ரோகித் சர்மா 24 ரன் எடுத்து அவுட் ஆகினர். தொடர்ந்து கள்ம் புகுந்த சூர்யகுமார் ஒருபுறம் நிலைத்து நின்று ஆடினார். மறுபுறம் திலக் வர்மா 1 ரன், வில் ஜேக்ஸ் 17 ரன், ஹர்திக் பாண்ட்யா 26 ரன் எடுத்து அவுட் ஆகினர்.

இறுதியில் மும்பை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 184 ரன்கள் எடுத்தது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 57 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து 185 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் ஆட உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்