இந்திய அணியின் பயிற்சியாளராகிறாரா தோனி....? - ஆகாஷ் சோப்ரா பதில்

இந்திய கிரிக்கெட் அணி தற்போதைய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் செயல்பட்டு வருகிறார்.;

Update:2025-08-17 21:38 IST

கோப்புப்படம்

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி தற்போதைய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் செயல்பட்டு வருகிறார். இவரது தலைமையின் கீழ் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்றது. இந்நிலையில், இவருக்கு அடுத்த படியாக இந்திய அணியின் தலைமை பயிறியாளராக முன்னாள் வீரரான தோனி செயல்படுவாரா? என சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் நிலவி வருகின்றன.

இந்நிலையில், இந்திய அணியின் பயிற்சியாளராகிறாரா தோனி....? என்ற கேள்விக்கு ஆகாஷ் சோப்ரா பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, இது ஒரு முக்கியமான விஷயம். தோனி இதில் ஆர்வம் காட்டுவார் என்று நான் நினைக்கவில்லை. பயிற்சியாளர் பணி என்பது கடினமானது. பயிற்சியாளராக இருப்பது, விளையாடும்போது இருந்ததைப் போலவே உங்களை பிஸியாக வைத்திருக்கும்.

சில நேரங்களில் அதைவிடவும் அதிகமாக இருக்கும். உங்களுக்கு குடும்பம் இருக்கிறது. நீங்கள் உங்கள் வாழ்நாள் முழுவதும் ஒரே வேலையை செய்துவிட்டு, பயணப் பெட்டியுடன் வாழ்ந்துவிட்டு, இப்போது அந்த வேலையை செய்ய விரும்ப மாட்டீர்கள். அதனால்தான் பல வீரர்கள் பயிற்சியாளர் பணியில் ஈடுபடுவதில்லை. ஈடுபட்டாலும் அது இரண்டு மாத ஐ.பிஎல் பணியாக மட்டுமே இருக்கும்.

ஆனால், முழுநேர இந்திய தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றால், அது ஆண்டுக்கு 10 மாத கடமையாக இருக்கும். தோனிக்கு அவ்வளவு நேரம் இருக்குமா என்று எனக்குத் தெரியவில்லை. அவருக்கு அவ்வளவு நேரம் இருந்தால் நான் ஆச்சரியப்படுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்