"இந்திய கிரிக்கெட்டுக்கு கோலி ஆற்றிய பங்கை மறுக்கவே முடியாது" - ஷாஹித் அப்ரிடி
விராட் போன்ற வீரர்கள் அரிதானவர்கள். அவர்கள் விசேஷமாக நடத்தப்பட வேண்டியவர்கள் என அப்ரிடி கூறியுள்ளார்.;
image courtesy: PTI
கராச்சி,
இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி. இவர் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திடீரென டெஸ்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதனால் அவருடைய டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது. இவர் ஒருநாள் போட்டியில் மட்டும் விளையாட இருக்கிறார்.
இந்த நிலையில் பாகிஸ்தான் ஜாம்பவான்கள் ஷாஹித் அப்ரிடி விராட் கோலியை பாராட்டியுள்ளார். இது தொடர்பாக ஷாஹித் அப்ரிடி கூறியதாவது, விராட் கோலியை பற்றி நீங்கள் அதிகமாக சொல்ல முடியும். அவர் மிகவும் ஆக்ரோஷமானவர், சில சமயங்களில் சர்ச்சைக்குரியவர். ஆனால், அவர் இந்திய கிரிக்கெட்டுக்கு என்ன செய்திருக்கிறார் என்பதை மறுக்க முடியாது. அவர் அணிக்காக தன்னால் முடிந்த அனைத்தையும் கொடுத்து, தனி ஒருவராகப் போட்டிகளை வென்றவர்.
அவரைப் போன்ற வீரர்கள் அரிதானவர்கள். அவர்கள் விசேஷமாக நடத்தப்பட வேண்டியவர்கள். அவர் முன்பு கோபக்காரராக இருந்தார். சுனில் கவாஸ்கர் கூட ஒருமுறை அவரை கட்டுப்படுத்துமாறு பி.சி.சி.ஐ-யிடம் கேட்டது எனக்கு நினைவிருக்கிறது. ஆனால், திருமணத்திற்குப் பிறகு, விராட் கோலி நிறைய முதிர்ச்சியடைந்துள்ளார். அவர் அதிக மரியாதைக்கு தகுதியானவர். இவ்வாறு அவர் கூறினார்.