மார்ஷ், ஹெட், கிரீன் சதம்: ஆஸ்திரேலிய அணி 431 ரன்கள் குவிப்பு

ஆஸ்திரேலியா தரப்பில் கேமரூன் கிரீன், டிராவிஸ் ஹெட் மற்றும் மிட்செல் மார்ஷ் சதம் அடித்து அசத்தினர்.;

Update:2025-08-24 13:31 IST

Image Courtesy: X (Twitter) / File Image

மெக்காய்,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் கெய்ன்சில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 98 ரன் வித்தியாசத்திலும், மெக்காயில் நடந்த 2-வது ஆட்டத்தில் 84 ரன் வித்தியாசத்திலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி மெக்காய் நகரில் இன்று நடந்து வருகிறது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர்களாக மிட்செல் மார்ஷ் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் களம் இறங்கினர்.

இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் சேர்த்தனர். இதனால் அணியின் ஸ்கோர் சீராக உயர்ந்தது. இந்த இணையை பிரிக்க முடியாமல் தென் ஆப்பிரிக்க வீரர்கள் திணறினர். இதில் சிறிது அதிரடி காட்டிய டிராவிஸ் ஹெட் சதம் அடித்து அசத்தினார். அவர் 103 பந்தில் 142 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

தொடர்ந்து கேமரூன் க்ரீன் களம் புகுந்தார். மறுபுறம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய மிட்செல் மார்ஷ் சதம் அடித்த நிலையில் (100 ரன்) அவுட் ஆனார். தொடர்ந்து அலெக்ஸ் கேரி களம் இறங்கினார். கேரி - கிரீன் ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் ரன் மளமளவென உயர்ந்த்து.

அதிரடியாக ஆடிய கேமரூன் கிரீன் 47 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 431 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 432 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா ஆட உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்