நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டம்: சிறந்த பீல்டராக தேர்வு செய்யப்பட்ட இந்திய வீரர் யார் தெரியுமா..?

ஐ.சி.சி. தொடர்களில் ஒவ்வொரு போட்டியிலும் பீல்டிங்கில் சிறந்து விளங்கும் இந்திய வீரருக்கு பி.சி.சி.ஐ. விருது வழங்கி கவுரவித்து வருகிறது.;

Update:2025-03-03 11:31 IST

image courtesy:twitter/@BCCI

மும்பை,

சாம்பியன்ஸ் டிராபியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் இந்தியா 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

முன்னதாக ஐ.சி.சி. தொடர்களில் ஒவ்வொரு போட்டியிலும் பீல்டிங் துறையில் சிறந்து விளங்கும் இந்திய வீரருக்கு பி.சி.சி.ஐ. 'இம்பேக்ட் பீல்டர் விருது' வழங்கி கவுரவித்து வருகிறது.

அதன்படி நியூசிலாந்துக்கு எதிரான இந்த ஆட்டத்தின் சிறந்த பீல்டராக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு இந்த விருதை இந்திய பயிற்சியாளர்கள் குழுவில் இடம்பெற்றுள்ள நுவான் வழங்கி கவுரவித்தார்.

 

Tags:    

மேலும் செய்திகள்