மேக்ஸ்வெல் அசத்தல்: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்ற ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா 19.5 ஓவரில் 173 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது;

Update:2025-08-16 19:08 IST

கெய்ன்ஸ்,

மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது . இதில் முதலாவது ஆட்டத்தில் 17 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவும், 2-வது ஆட்டத்தில் 53 ரன் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றன. இந்த நிலையில் இந்த தொடரின் முடிவை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி போட்டி கெய்ன்ஸ் நகரில் இன்று நடைபெற்றது .

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மிட்சேல் மார்ஷ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி தென் ஆப்பிரிக்கா அணி முதல் பேட்டிங் செய்தது.

தொடக்கத்தில் மார்க்ரம் ஒரு ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ரியான் ரிகேல்டன் 13 ரன்களிலும் , லுவான் பிரிட்டோரியஸ் 24 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

தொடர்ந்து வந்த டெவால்ட் பிரேவிஸ் அதிரடியாக விளையாடினார். பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்ட அவர் அரைசதம் அடித்து அசத்தினார் . தொடர்ந்து டெவால்ட் பிரேவிஸ் 53 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் .

பின்னர் நிலைத்து டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 25 ரன்கள் , ஆடி ரசி வண்டர் டசன் 38 ரன்கள் எடுத்தனர். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு தென் ஆப்பிரிக்கா அணி 172 ரன்கள் எடுத்தது . ஆஸ்திரேலிய அணி சார்பில் நாதன் எலிஸ் 3விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் 173 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. தொடகக் வீரரான கேப்டன் மிட்செல் மார்ஷ் 37 பந்தில் 54 ரன்கள் விளாசி, சிறப்பான அடித்தளம் அமைத்துக் கொடுத்தார்.அதன்பின் மளமளவென விக்கெட் சரிந்தது. ஆனால் மேக்ஸ்வெல் அபாரமான ஆட்த்தை வெளிப்படுத்தினார்.

இதனால் ஆஸ்திரேலியா 19.5 ஓவரில் 173 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில்வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தொடரை 2-1 என ஆஸ்திரேலியா கைப்பற்றியது.மேக்ஸ்வெல் 36 பந்தில் 8 பவுண்டரி, 2 சிக்சருடன் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்