நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் முதல் டெஸ்ட் டிரா: டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் ஏற்பட்ட மாற்றம் என்ன..?

ஆஸ்திரேலிய அணி 100 சதவீத புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறது.;

Update:2025-12-06 18:21 IST

துபாய்,

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சிக்கு (2025-27) உட்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் கிறைஸ்ட்சர்ச்சில் நடந்த இவ்விரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது.

இந்நிலையில் இந்த போட்டி முடிவடைந்ததை அடுத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் ஆஸ்திரேலிய அணி 100 சதவீத புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறது. தென் ஆப்பிரிக்கா 75 சதவீத புள்ளிகளுடன் 2-வது இடத்தில் நீடிக்கிறது. இலங்கை (66.67 சதவீதம்), பாகிஸ்தான் (50 சதவீதம்), இந்தியா (48.15 சதவீதம்), இங்கிலாந்து (36.11 சதவீதம்) அணிகள் முறையே 3 முதல் 6 இடங்களில் உள்ளன.

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்ட் டிராவில் முடிந்ததால் இந்த சுழற்சியில் முதல் புள்ளிகளை பெற்ற நியூசிலாந்து 33.33 சதவீதத்துடன் 7-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. வங்காளதேசம் (16.66 சதவீதம்) 8-வது இடத்தில் உள்ளது.

நடப்பு டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இதுவரை 6 போட்டிகளில் ஆடி 5 தோல்வி, நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் மட்டுமே டிரா கண்ட் வெஸ்ட் இண்டீஸ் 5.56 சதவீத புள்ளிகளுடன் கடைசி இடத்தில் (9-வது இடம்) உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்