ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: முக்கிய முடிவை கையிலெடுத்த ரோகித் சர்மா..?
இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் போட்டி அக்டோபர் 19-ம் தேதி நடைபெற உள்ளது.;
image courtesy:PTI
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணி வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் முதலில் ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் போட்டி அக்டோபர் 19-ம் தேதி நடைபெற உள்ளது.
அந்த ஒருநாள் தொடரே இந்திய ஒருநாள் அணியின் கேப்டனான ரோகித் சர்மாவின் கடைசி சர்வதேச தொடராக அமையலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் அவர் 2027 ஒருநாள் உலகக்கோப்பை தொடர் வரை விளையாடுவதை இலக்காக கொண்டுள்ளார். அவர் உலகக்கோப்பை தொடரில் விளையாடுவாரா-இல்லையா? என்பதை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரே நிர்ணயிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த ஒருநாள் தொடருக்கு தயாராகும் பொருட்டு இந்திய கேப்டன் ரோகித் சர்மா முக்கிய முடிவை ஒன்றை கையிலெடுத்துள்ளார்.
அதன்படி அடுத்த மாதம் நடைபெற உள்ள ஆஸ்திரேலியா ஏ - இந்தியா ஏ இடையிலான ஒருநாள் தொடரில் விளையாட ரோகித் சர்மா விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கு தயாராகும் பொருட்டு அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.