பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடர்: தென் ஆப்பிரிக்க அதிரடி வீரர் விலகல்

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது.;

Update:2025-11-05 12:10 IST

Image Courtesy: @ICC

கேப்டவுன்,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் முடிந்தது. தொடர்ந்து நடந்த டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் கைப்பற்றியது.

தொடர்ந்து நடந்து வரும் ஒருநாள் தொடரின் முதல் போட்டி முடிவில் 1-0 என பாகிஸ்தான் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது.

இந்நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து தென் ஆப்பிரிக்க அதிரடி வீரர் டெவால்டு பிரேவிஸ் விலகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டி20 தொடரின் போது பிரேவிஸ் காயத்தை சந்தித்துள்ளார். அந்த காயம் குணமடைய சில வாரங்கள் ஆகும் என்பதால் அவர் இந்த தொடரில் இருந்து விலகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்