பில் சால்ட் அதிரடி சதம்: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய இங்கிலாந்து
இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக பில் சால்ட் 141 ரன்கள் எடுத்தார்.;
Image Courtesy: @englandcricket
கார்டிப்,
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்க அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்டது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரில் 1-0 என தென் ஆப்பிரிக்கா முன்னிலை வகிக்கிறது. தொடர்ந்து இவ்விரு அணிகள் இடையிலான 2வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி அதிரடியில் மிரட்டியது. அந்த அணியில் பில் சால்ட் சதம் அடித்து அசத்தினார். இறுதியில் இங்கிலாந்து 20 ஓவரில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 304 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக பில் சால்ட் 141 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து 305 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய தென் ஆப்பிரிக்கா 16.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 158 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 146 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.
இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஆர்ச்சர் 3 விக்கெட் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என சமனில் உள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 3வது டி20 போட்டி நாளை நடக்கிறது.