ஒருநாள் கிரிக்கெட்டில் 5 சிறந்த இந்திய வீரர்களை தேர்வு செய்த ரவி சாஸ்திரி.. யாரெல்லாம் தெரியுமா..?
ரவி சாஸ்திரி தேர்வு செய்தவர்களில் யுவராஜ் சிங் மற்றும் பும்ரா இடம்பெறவில்லை.;
மும்பை,
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் சிறப்பான செயல்பாட்டினை வெளிப்படுத்திய 5 இந்திய வீரர்களை முன்னாள் வீரரான ரவி சாஸ்திரி தேர்வு செய்துள்ளார்.
முதலாவதாக விராட் கோலியை தேர்வு செய்துள்ள அவர், 2-வது இடத்தில் சச்சின் தெண்டுல்கரையும் தேர்வு செய்துள்ளார். ஆனால் அவர் இந்திய கிரிக்கெட்டில் சிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவரான யுவராஜ் சிங், அதிரடி ஆட்டக்காரர் ஆன வீரேந்திர சேவாக் மற்றும் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் ஆகியோரை தேர்வு செய்யாமல் ஆச்சரியமளித்துள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் ரவி சாஸ்திரி தேர்வு செய்த சிறந்த 5 இந்திய வீரர்கள் விவரம்:
1. விராட் கோலி
2. சச்சின் தெண்டுல்கர்
3. கபில் தேவ்
4. மகேந்திரசிங் தோனி
5. ரோகித் சர்மா