இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக தயார் - முன்னாள் கேப்டன் அதிரடி அறிவிப்பு

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கம்பீர் செயல்பட்டு வருகிறார்.;

Update:2025-06-23 17:38 IST

image courtesy:PTI

மும்பை,

ராகுல் டிராவிட்டுக்கு பின் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் செயல்பட்டு வருகிறார். அவரது தலைமையில் இந்திய அணி நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்தது. இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை தவற விட்டது.

இதன் காரணமாக கம்பீர் மீது பெருமளவில் ரசிகர்கள் எழுந்தன. இதனையடுத்து நடைபெற்ற ஐ.சி.சி.சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி கோப்பையை வென்றது. இதனால் கம்பீர் மீதான விமர்சங்கள் குறைய தொடங்கின. அந்த சூழலில் இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

இந்நிலையில் இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக வர தாம் தயாராக இருப்பதாக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:- "இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்படுவது பற்றி நான் அதிகம் சிந்தித்ததில்லை. ஏனெனில் இதற்கு முன் நிறைய பொறுப்புகளில் இருந்தேன். 2013-ல் கெரியரை முடித்த நான் பிசிசிஐ தலைவராக வந்தேன். இங்கிருந்து வருங்காலம் எதை வைத்திருக்கிறது என்பதைப் பார்க்கலாம். தற்போது எனக்கு 50 வயது மட்டுமே ஆகிறது. எனவே என்ன நடக்கும் என்பதைப் பார்க்கலாம். அந்த வேலையை செய்வதற்கு நான் தயாராக இருக்கிறேன்.

அது எங்கே செல்கிறது என்பதைப் பார்ப்போம். கவுதம் கம்பீர் கொஞ்சம் மெதுவாகத் தொடங்கியுள்ளார். நியூசிலாந்து, ஆஸ்திரேலிய தொடர்களில் தோற்ற அவர் சாம்பியன்ஸ் டிராபியை வென்றார். மிகவும் ஆர்வமிக்க அவரைப் பற்றி எனக்குத் தெரியாது. ஏனெனில் பயிற்சியாளராக அவருடன் நான் வேலை செய்ததில்லை. தற்போது அவர் அணி, வீரர்கள் பற்றி அனைத்தையும் வெளிப்படையாக பேசுவதைப் பார்க்க முடிகிறது. தற்போதைய இங்கிலாந்து தொடர் அவருக்கு பெரிய சவாலாக இருக்கும். ஆனால் அனைவரையும் போல அவரும் கற்றுக்கொண்டு முன்னேறுவார். அவருக்கு வாழ்த்துகள்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்