ரத்தான இந்தியா - பாகிஸ்தான் போட்டி குறித்து கேள்வி எழுப்பிய நிருபர்.. ஒற்றை வரியில் பதிலளித்த சிராஜ்

உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டில் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.;

Update:2025-07-22 12:26 IST

image courtesy:PTI

மான்செஸ்டர்,

இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. தொடரில் இந்தியா 1-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராப்போர்டில் நாளை தொடங்குகிறது. இதனையொட்டி இந்திய அணியின் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போட்டிக்கு முந்தைய செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட இந்திய வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜிடம் நிருபர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதற்கு சிராஜ் பதிலளித்தார்.

அப்போது நிருபர் ஒருவர், உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டில் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் ரத்தானது குறித்து கேட்டார். அதற்கு சிராஜ், 'எனக்கு தெரியாது' என்று ஒற்றை வரியில் பதிலளித்தார்.

மீண்டும் விடாத அந்த நிருபர் ஐ.சி.சி. தொடர்களில் இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாடுமா என்று கேட்டார். அதற்கு சிராஜ், 'என்ன சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை' என பதிலளித்தார்.

2-வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடைபெற இருந்த இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. பஹல்காமில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் காரணம் என்பதால் அந்த நாட்டை சேர்ந்த அணியினருடன் தங்களால் விளையாட முடியாது என்று கூறி இந்திய வீரர்கள் விளையாட மறுத்து விட்டனர். இதனால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்