உத்தரபிரதேச எம்.பி.-யுடன் ரிங்கு சிங்கிற்கு திருமண நிச்சயதார்த்தம் - வைரலாகும் வீடியோ

பிரியா சரோஜ், உத்தரப் பிரதேசத்தில் உள்ள மச்சிலிஷஹர் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் சமாஜ்வாதி எம்.பி. ஆவார்.;

Update:2025-06-08 17:36 IST

Image Courtesy: X (Twitter)

லக்னோ,

இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சமாஜ்வாதி கட்சி எம்.பி. பிரியா சரோஜை திருமணம் செய்ய உள்ளார். இந்நிலையில், இன்று லக்னோவில் உள்ள ஒரு ஆடம்பர ஓட்டலில் இருவரும் மோதிரம் மாற்றி நிச்சயம் செய்து கொண்டனர். ரிங்கு சிங் மற்றும் பிரியா சரோஜ் ஆகியோர் கடந்த ஒரு வருடமாக டேட்டிங் செய்து வந்தனர்.

இவர்களின் காதல் தற்போது கல்யாணம் வரை வந்துள்ளது. விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளவுள்ளனர். 25 வயதான பிரியா சரோஜ், உத்தரப் பிரதேசத்தில் உள்ள மச்சிலிஷஹர் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் சமாஜ்வாதி எம்.பி. ஆவார். அரசியலில் நுழைவதற்கு முன்பு, அவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.



Tags:    

மேலும் செய்திகள்