சதம் அடித்ததை தனது பாணியில் கொண்டாடிய ரிஷப் பண்ட்
டெஸ்ட் போட்டிகளில் பண்ட் அடித்த 7-வது சதம் இதுவாகும்;
லீட்ஸ்,
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.
இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்சில் 85 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 359 ரன்கள் குவித்திருந்தது. கேப்டன் சுப்மன் கில் 127 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 65 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஜெய்ஸ்வால் 101 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இந்த சூழலில் 2-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. சுப்மன் கில், ரிஷப் பண்ட் தொடர்ந்து பேட்டிங் செய்தனர்.
அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பண்ட் சிக்சர் அடித்து தனது சதத்தை பூர்த்தி செய்தார். டெஸ்ட் போட்டிகளில் பண்ட் அடித்த 7-வது சதம் இதுவாகும். இந்த நிலையில் சதம் அடித்ததை தனது பாணியில் பல்டி அடித்து ரிஷப் பண்ட் கொண்டாடினார் . இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது . தொடர்ந்து கில் 147 ரன்களிலும், பண்ட் 134 ரன்களிலும் வெளியேறினர்.