எஸ்.ஏ.20 ஓவர் லீக் கிரிக்கெட்: டர்பன் அணியின் புதிய கேப்டன் அறிவிப்பு

எய்டன் மார்க்ரமை தங்களது கேப்டனாக நியமித்துள்ளதாக டர்பன் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.;

Update:2025-09-13 13:10 IST

Image Courtesy: @DurbansSG

கேப்டவுன்,

6 அணிகள் பங்கேற்கும் 4-வது எஸ்.ஏ.20 எனப்படும் தென் ஆப்பிரிக்க லீக் கிரிக்கெட் போட்டி அடுத்தாண்டு ஜனவரி 23-ந்தேதி முதல் பிப்ரவரி 24-ந்தேதி வரை தென் ஆப்பிரிக்காவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான வீரர்களின் ஏலம் சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது.

இந்த ஏலத்தில் தென் ஆப்பிரிக்க டி20 அணியின் கேப்டனான எய்டன் மார்க்ரமை ரூ.7 கோடிக்கு டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் வாங்கியது. இந்நிலையில், சஞ்சீவ் கோயங்காவுக்கு சொந்தமான டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தங்களது கேப்டனை அறிவித்துள்ளது.

அதன்படி, ரூ.7 கோடிக்கு வாங்கப்பட்ட எய்டன் மார்க்ரமை தங்களது கேப்டனாக நியமித்துள்ளதாக டர்பன் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்