ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடர்: லிட்டன் தாஸ் ஆடுவது சந்தேகம்..?

ஆப்கானிஸ்தான் - வங்காளதேசம் இடையிலான தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர் யுஏஇ-யில் நடக்கிறது.;

Update:2025-09-28 16:30 IST

Image Courtesy: @ICC 

டாக்கா,

ஆப்கானிஸ்தான் - வங்காளதேசம் இடையிலான தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷார்ஜா மற்றும் அபுதாபி ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. இந்த தொடர் அக்டோபர் 2ம் தேதி தொடங்குகிறது.

இந்த தொடரில் முதலில் டி20 போட்டிகளும், அதனை தொடர்ந்து ஒருநாள் போட்டிகளும் நடக்கிறது. இந்த தொடரின் டி20 ஆட்டங்கள் ஷார்ஜாவிலும், ஒருநாள் போட்டிகள் அபுதாபியிலும் நடக்கின்றன.

இந்நிலையில், இந்த தொடரில் வங்காளதேச அணியின் முன்னணி வீரரான லிட்டன் தாஸ் கலந்து கொள்ள மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. ஆசிய கோப்பை தொடரில் அவர் காயத்தை சந்தித்ததால் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் லிட்டன் தாஸ் கலந்து கொள்வதில் சிக்கல் நிலவுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்