பாகிஸ்தானுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி: தென் ஆப்பிரிக்கா 143 ரன்களுக்கு ஆல் அவுட்

பாகிஸ்தான் வீரர் அகமது 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்;

Update:2025-11-08 18:37 IST

லாகூர்,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் முடிந்தது. டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் கைப்பற்றியது.

இதனை தொடர்ந்து நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானும், 2வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவும் வெற்றிபெற்றது.

இந்நிலையில், ஒருநாள் தொடரை கைப்பற்றுவது யார் என்பதை தீர்மானிக்கும் 3வது மற்றும் கடைசி ஆட்டம் பைசலாபாத்தில் இன்று நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களான பிரிட்டோரியஸ் , டிகாக் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பிரிட்டோரியஸ் 39 ரன்களிலும், டிகாக் 53 ரன்களிலும் அவுட் ஆகினர். அடுத்து வந்த வீரர்கள் பாகிஸ்தான் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

இறுதியில் 37.5 ஓவரில் தென் ஆப்பிரிக்கா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. அபாரமாக பந்து வீசிய பாகிஸ்தான் வீரர் அப்ரர் அகமது 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்க உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்