இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்: தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு
இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா முதல் ஒருநாள் போட்டி செப்டம்பர் 2-ம் தேதி நடைபெற உள்ளது.;
image courtesy:ICC
கேப்டவுன்,
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் ஒருநாள் தொடரும், அடுத்ததாக டி20 போட்டிகளும் நடைபெற உள்ளன. அதன்படி முதல் ஒருநாள் போட்டி லீட்ஸ் மைதானத்தில் செப்டம்பர் 2-ம் தேதி நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்த சுற்றுப்பயணத்திற்கான தென் ஆப்பிரிக்க அணிகள் (டி20, ஒருநாள்) அறிவிக்கப்பட்டுள்ளன. டி20 அணிக்கு மார்க்ரமும், ஒருநாள் அணிக்கு பவுமாவும் கேப்டன்களாக தொடருகின்றனர். அதிரடி வீரரான டேவிட் மில்லர் மீண்டும் டி20 போட்டிகளுக்கான அணியில் இடம்பெற்றுள்ளார்.
தென் ஆப்பிரிக்க அணிகள் பின்வருமாறு:-
ஒருநாள்: டெம்பா பவுமா (கேப்டன்), டோனி டி ஜோர்ஜி, லுங்கி என்கிடி, கார்பின் போஷ், கேசவ் மகாராஜ், லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், மேத்யூ பிரீட்ஸ்கே, க்வேனா மபாகா, காகிசோ ரபாடா, டெவால்ட் பிரெவிஸ், மார்க்ராம், ரியான் ரிக்கல்டன், நந்த்ரே பர்கர், வியான் முல்டர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், செனுரன் முத்துசாமி.
டி20 அணி: மார்க்ரம் (கேப்டன்), கேசவ் மஹராஜ், லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், கார்பின் போஷ், குவேனா மபாகா, ககிசோ ரபாடா, டெவால்ட் பிரெவிஸ், டேவிட் மில்லர்,ரியான் ரிக்கல்டன், டொனோவன் பெரீரா, செனூரன் முத்துசாமி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், மார்கோ ஜான்சன், லுங்கி நிகிடி, லிசாட் வில்லியம்ஸ்.