இலங்கை அபார பந்துவீச்சு.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஒருநாள் தொடரை கைப்பற்றி அசத்தல்

இலங்கை - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது.;

Update:2025-02-14 16:23 IST

கொழும்பு,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் இலங்கை வெற்றி பெற்றி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 281 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக குசல் மெண்டிஸ் 101 ரன்கள் அடித்தார்.

இதனையடுத்து 282 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, இலங்கையின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. வெறும் 24.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த ஆஸ்திரேலியா 107 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனால் 174 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இலங்கை தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

ஆஸ்திரேலிய தரப்பில் அதிகபட்சமாக ஸ்டீவ் சுமித் 29 ரன்கள் அடித்தார். அபாரமாக பந்து வீசிய இலங்கை தரப்பில் துனித் வெல்லலகே 4 விக்கெட்டுகளும், அசிதா பெர்னண்டோ மற்றும் வனிந்து ஹசரங்கா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும் கைப்பற்றி அசத்தினர். 

Tags:    

மேலும் செய்திகள்