இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: சுப்மன் கில், ரிஷப் உடன் லண்டனில் விராட் கோலி ஆலோசனை..?

இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடர் 20-ம் தேதி ஆரம்பமாக உள்ளது.;

Update:2025-06-17 20:46 IST

image courtesy:PTI

லண்டன்,

இங்கிலாந்துக்கு சென்றுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதில் இந்தியா - இங்கிலாந்து மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 20-ந்தேதி லீட்சில் தொடங்குகிறது.

இந்த தொடர் 4-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த தொடருக்கான 18 வீரர்கள் கொண்ட இந்திய அணி ஏற்கனவே இங்கிலாந்துக்கு சென்று பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த தொடரின் முதல் போட்டிக்கு முன்னதாக இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி இங்கிலாந்தில் பயிற்சி மேற்கொண்டு வரும் சுப்மன் கில், ரிஷப் பண்ட், மேலும் சில வீரர்களை லண்டனில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்ததாகவும், அவர்களும் விராட் கோலியின் அழைப்பை ஏற்று சென்றதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்திய டெஸ்ட் அணியின் சிறந்த கேப்டன்களில் ஒருவரான விராட் கோலி தன்னுடைய கேப்டன்ஷிப் அனுபவத்தை அவர்களுடன் பகிர்ந்ததாகவும், இங்கிலாந்தில் என்ன மாதிரியான சவால்கள் இருக்கும் என்பது குறித்து நிறைய தகவல்களை அவர்களுக்கு வழங்கியதாகவும் தகவல்கள் கூறுகின்றன. அத்துடன் இங்கிலாந்தில் சிறப்பாக செயல்பட வீரர்களுக்கு ஆலோசனைகள் வழங்கியதாகவும் கூறப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்